கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலன் மரணம்
By DIN | Published on : 13th February 2019 09:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கரூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் காதலன் இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வயலூரைச் சேர்ந்தவர் சொர்ணம் (45), விவசாயி. இவர் லாலாப்பேட்டை-சீகம்பட்டிச்சாலையில் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் உறவுக்கார விதவை பெண்ணான அதே பகுதியைச் சேர்ந்த அமுதா(40) என்பவரோடு சொர்ணத்திற்கு தொடர்பு ஏற்பட்டதாம்.
இதுகுறித்து சொர்ணம் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து முடிவு செய்துள்ளனர். இதையடுத்து திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்தில் இருவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளனர்.
இதை செவ்வாய்க்கிழமை கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சொர்ணம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அமுதா மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக லாலாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.