சுடச்சுட

  

  கரூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு தற்போது பழுதடைந்துள்ள 2,094 வீடுகளின் பராமரிப்புப் பணிகளுக்கு ரூ. 10.47 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
  கரூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கால கட்டங்களில் அரசு திட்டங்களின் மூலம் கட்டித்தரப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளைச் சரிசெய்து தர வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
  அவர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று சிறப்பு அனுமதி பெற்று, கரூர் மாவட்டத்தில் அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளைக் கணக்கெடுக்க உத்தரவிட்டு, அவர்களுக்கு வீடுகளைப் பராமரிப்பு செய்து கொள்ள ஒரு வீட்டிற்கு தலா ரூ.50,000 ஒதுக்கப்பட்டது. 
  அதன்படி, முழுவதும் பாதிப்படைந்த வீடுகளாக மாவட்டம் முழுவதும் 643 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு முதல்வரின் பசுமை வீடுகளும், பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 
  அதனடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 350 வீடுகளும்,  அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 150 வீடுகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 130 வீடுகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 130 வீடுகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 250 வீடுகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 314 வீடுகளும் என முதற்கட்டமாக 2,094 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு ஒரு வீட்டிற்கு தலா ரூ.50,000 வீதம் ரூ. 10.47 கோடியில் வீடுகளை புனரமைப்பு செய்து கொள்வதற்கான ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai