நில உரிமை மாற்றத்தில் யுடிஆர் திட்டத்தை கொண்டு வர வேண்டும்: காவிரி நீர் பாசன சங்கம்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 கிடைக்க நில உரிமை மாற்றத்தில் யுடிஆர் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 கிடைக்க நில உரிமை மாற்றத்தில் யுடிஆர் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத் தலைவர் வி. ராஜாராம் வெளியிட்ட அறிக்கை:
1924-ல் ஆங்கிலேய அரசால் நிலம் சம்பந்தமான உரிமைகள் பதியப்பட்டன. இந்தப் பதிவில்  பல சிக்கல்கள், பெயர் தவறுகள், கூட்டுப்பட்டாக்கள் என பல குழப்பங்கள் ஏற்பட்டதால் 1982-ல் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் மாநில முழுவதும் பல அலுவலர்களைக்கொண்டு கிராம நிலப்பதிவேடுகளை பார்த்து நிலம் வாரியாகச் சென்று உரிமையாளர்களை விசாரித்து சரியான உரிமையாளர்களைபதிவு செய்ய யூடிஆர் என்ற நில உரிமை மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த திட்டத்தை மீண்டும் எம்ஜிஆர் கொண்டுவந்ததுபோல பட்டாதாரர்களுக்கு இலவசமாக கணினி பட்டா அரசு வழங்க வேண்டும்.
 ப்டடாவில் சரி செய்ய வேண்டியவர்கள் உடனே மனு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சீர் செய்தல் வேண்டும். 
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு ஆண்டுக்கான உதவித்தொகை ரூ.6,000 உரியவர்களுக்கு கிடைக்காமல் போகும். விவசாயிகள் நலம், 
விவசாய வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இந்த ஆண்டுதான் முழு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன. 
விவசாயிகளுக்கு அரசு எடுக்கும் திட்டங்கள் ஒவ்வொரு விவசாயிக்கும் சென்றடைய அரசு இந்த திட்டத்தை உடனே கொண்டு வரவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com