யாருக்கு வாக்களித்தோம் வசதி செயல்விளக்கம்

தாந்தோணிமலையில் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து  மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாந்தோணிமலையில் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து  மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்தில் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வரும் மக்களவைத் தேர்தல் 2019-ல் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சி அளிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 6 வாகனங்கள் வீதம் மொத்தம் 24 வாகனங்கள் கடந்த 9-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு வாகனத்திலும் வாக்காளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த 2 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கரூர் மாவட்டத்தில் 608 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 1031 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று செயல் விளக்கம் அளித்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு குழுவினரும் நாள் ஒன்றுக்கு நான்கு வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்கிறார்கள். 
கரூர் தாந்தோணிமலையில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடம் அருகே செவ்வாய்க்கிழமை தோரணக்கல்பட்டி வருவாய் ஆய்வாளர் சிவகாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்து தாங்கள் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்த்து தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். நிகழ்ச்சியில் நகர சர்வேயர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com