அன்ன காமாட்சியம்மன் கோயிலில் தீமிதி விழா
By DIN | Published On : 20th February 2019 08:52 AM | Last Updated : 20th February 2019 08:52 AM | அ+அ அ- |

கரூர் அன்ன காமாட்சியம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீ மிதி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கரூர் மேற்குபிரதட்சணம் சாலையில் உள்ள அன்னகாமாட்சியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை அமராவதி ஆற்றில் இரந்து கரகம் பாலித்து வருதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் தங்களது கைக்குழந்தைகளை சுமந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தொடர்ந்து 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து எம். கணேசன் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, தஞ்சை புகழேந்தி சாய்நிலா குழுவினரின் கரகாட்டம் நடைபெற்றது.
தொடந்து புதன்கிழமை கோயில் முன் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, மாவிளக்கு வழிபாடும் நடைபெறும். மாலை 6 மணிக்கு கரகம் ஆற்றுக்கும் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.