முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கந்து வட்டி கொடுமை தடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 28th February 2019 09:17 AM | Last Updated : 28th February 2019 09:17 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டத்தில் நிலவும் கந்துவட்டிக்கொடுமையை தடுக்க தமிழக ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
கரூரில் கட்சியின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை மாவட்டத் தலைவர் எம்.பி. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கே. பழனிச்சாமி, பொருளாளர் செ. சத்தியராஜ், மகளிரணி தலைவர் எஸ். சரிதா, மகளிரணி செயலர் ஏ. மகேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிறுவனர் தலைவர் ந. சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தமிழக அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்ப அட்டைக்கு ரூ.2,000 வீதம் வழங்கிய தமிழக அரசுக்கு தமிழக ஜனநாயக கட்சி நன்றி தெரிவிப்பது, மேலும் இந்தியாவில் வாழும் சிறு,குறுவிவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கியதற்கும் நன்றி தெரிவிப்பது, கோடை காலம் துவங்கிய நிலையில் கரூர் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் தீவிரமாக நடைபெறுவத தடுக்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் பைனான்ஸ் என்ற பெயரில் சிலர் கூலித்தொழிலாளர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள், நடுத்தர வர்க்கத்தினரிடம் கடன் கொடுத்து, அதிக வட்டி வசூலித்து வருகிறார்கள். இவர்களின் அராஜகத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் கந்து வட்டித்தொழிலை முற்றிலும் அழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலர் ப. முத்து, இணைப் பொதுச் செயலர் எஸ்.எம். அருள், மாநில இளைஞரணி செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.