Enable Javscript for better performance
பணம் கேட்டுமிரட்டிய ரௌடி கொலை: பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பணம் கேட்டுமிரட்டிய ரௌடி கொலை: பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

    By DIN  |   Published on : 08th January 2019 08:25 AM  |   அ+அ அ-   |    |  

    கரூர் அருகே பணம் கேட்டு மிரட்டிய ரௌடியைக் கொலை செய்த வழக்கில் பேக்கரி  கடை உரிமையாளர் உள்பட 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    கிருஷ்ணராயபுரம் வட்டம், வயலூர் சரவணபுரத்தைச் சேர்ந்தவர் பிச்சை (33). இவர் குளித்தலை அய்யர்மலையில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரிடம் அய்யர்மலையைச் சேர்ந்த ரௌடி மகேசுவரன் (31) அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தாராம். ஞாயிற்றுக்கிழமை கடைக்கு வந்த மகேசுவரன், பிச்சையிடம் ரூ10,000 கேட்டு மிரட்டினாராம்.
     இதனால் விரக்தியடைந்த பிச்சை, தனது நண்பர்கள் வயலூர் வரகூரைச் சேர்ந்த பெருமாள்(44), திருச்சி மாவட்டம், கலிங்கப்பட்டி வெள்ளைச்சாமி மகன் செல்வம்(23), வயலூர் சரவணபுரத்தைச் சேர்ந்த சேகர்(30), கிருஷ்ணராயபுரம் மலையம்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன்(39) ஆகியோருடன் சேர்ந்து மகேசுவரனை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து மகேசுவரனிடம்,பணத்தை வாங்க அய்யர்மலையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கு அருகே வருமாறு பிச்சை கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த மகேசுவரனை பிச்சை உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீஸார்  அப்பகுதிக்குச் சென்று மகேசுவரனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    ஆனால் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை இரவு  உயிரிழந்தார்.  இதுகுறித்து குளித்தலை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப்பதிந்து, பிச்சை, பெருமாள், சேகர், சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவான செல்வத்தை தேடி வருகிறார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp