சுடச்சுட

  

  நீதிமன்ற உத்தரவின்படி  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் செவிலியர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    எம்ஆர்பி செவிலியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், மாநில நிர்வாகிகளின் பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்ட ஆட்சியரம் முன்பு எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் டைபெற்றது.
  சங்கத்தின் மாவட்டத் தலைவி ஜி. கவிதா தலைமை வகித்தார். செவிலியர் சுபா வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் மு. அன்பரசன் விளக்கவுரையும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் மு.சுப்ரமணியன் சிறப்புரையும் வழங்கினர்.
  அரசு ஊழியர் சங்க நிர்வாகி பொன்.ஜெயராம், ஆய்வக நுட்புனர் சங்க மாநிலச் செயலர் செர்வராணி மற்றும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai