ஆடுகளுக்கு காய்ச்சல், கழிச்சல் நோய் தென்பட்டால் கால்நடை மருத்துவமனையை அணுகுவது அவசியம்

பனிக்காலங்களில் ஆடுகளுக்கு காய்ச்சல், கழிச்சல் நோய் தென்பட்டால்  உடனடியாக கால்நடை மருத்துவமனையை அணுக

பனிக்காலங்களில் ஆடுகளுக்கு காய்ச்சல், கழிச்சல் நோய் தென்பட்டால்  உடனடியாக கால்நடை மருத்துவமனையை அணுக வேண்டும் என்றார் பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ம்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியை பாரதி.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடுகள் வளர்ப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
ஆடுகளுக்கு கொட்டகை  மற்றும் இடவசதிகள் நிறைவாக இருக்க வேண்டும்.  தீவனங்களை முறையாக வழங்க வேண்டும்.  மேலும் கால்நடைகளைத் தாக்கும் நோய்களான வெக்கை சார்பு, நீல நாக்கு, செம்மறியாட்டு அம்மை, துள்ளுமாரி, தொற்றுக் கழிதல், கருச்சிதைவு, குளம்பு அழுகல் ஆகிய நோய்களில் இருந்து ஆடுகளை பாதுகாக்க அவ்வப்போது, கால்நடை அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்து உரிய நேரத்தில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். மேலும் தற்போது பனிக் காலம் என்பதால் காய்ச்சல் அல்லது கழிச்சல் நோய் ஆடுகளுக்கு இருப்பது தென்பட்டால் உடனே அரசு மருத்துமனைக்கு அழைத்து வர வேண்டும் என்றார். தொடர்ந்து செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு பற்றியும், தீவனம் தயாரிப்பு முறைகள், இனப்பெருக்கம், சினை ஆடுகள் மற்றும் குட்டிகளை பாராமரிக்கும் முறை குறித்தும் கால்நடை மருத்துவர்கள் தமிழரசன், லோகேஷ், தெரசாராணி ஆகியோர் பேசினர்.  
க.பரமத்தி ஒன்றியத்திலுள்ள கூடலூர் கிழக்கு, தென்னிலை மேற்கு ஊராட்சிகளில் 182 பயனாளிகளுக்கு விலையில்லா  ஆடுகள் வழங்கப்பட நிலையில், அவர்களின் நலன்கருதி இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் செந்தில் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
முன்னதாக கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் வரவேற்றார். கால்நடை ஆய்வாளர் ஜானகி, மருத்துவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com