கரூர் பள்ளிகளில் பொங்கல் கொண்டாட்டம்

கரூர் வெங்கமேடு மற்றும்மணவாடியிலுள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

கரூர் வெங்கமேடு மற்றும்மணவாடியிலுள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.
வெங்கமேட்டிலுள்ள அன்னை வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஆர். மணிவண்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வரும், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம். கீதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பொங்கல் வைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய, கலாசாரத்தை நினைவுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வையொட்டி, மாணவ, மாணவிகள்  பட்டு வேட்டி, சட்டை,  பாவாடை,  குழந்தைகளுக்கான சேலைகளை அணிந்து வந்திருந்தனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், அக்னீஸ் கல்விக்குழும சேரிடபுள் நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள்,  பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இதுபோல மணவாடி லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் பினு கே.ஜோசப் தலைமையில் பள்ளி வளாகத்தில் பொங்கல்  விழா நடைபெற்றது. கிராமிய பொங்கல் வைத்து,
 கொண்டாட்டம்  நடைபெற்றது. பின்னர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com