கழிவறைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தால் தேசிய விருதுக்குப் பரிந்துரை

வீடுகளில் உள்ள கழிவறைகளில் சிறந்த விழிப்புணர்வு ஓவியம் வரைந்தால் தேசிய அளவிலான விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் உள்ள கழிவறைகளில் சிறந்த விழிப்புணர்வு ஓவியம் வரைந்தால் தேசிய அளவிலான விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரது வீடுகளிலும் கழிவறை கட்டிப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையிலும், மத்திய அரசு சுவட்ச் சுந்தர் செளசாலயா என்ற திட்டத்தின் மூலம் ஊராட்சிப்பகுதிளில்  மக்கள் தங்கள் வீட்டின் கழிவறைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய ஊக்குவிக்கின்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவறைகளில் பல வண்ணங்களில் கண்ணைக்கவரும் வகையிலும், கழிவறைகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்கள் வரைந்து, அதை புகைப்படம் எடுத்து ள்ஜ்ஹஸ்ரீட்ட்க்ஷட்ஹழ்ஹற்ம்ண்ள்ள்ண்ர்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்  என்ற இணையதளத்தில் வரும் 31-ம்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஓவியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஓவியத்திற்கு மத்திய அரசின் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். 
இதன் அடிப்படையில்,  தற்போது குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வீடுகளின் கழிவறைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன என்றும், மற்றப் பகுதி மக்களும் ஓவியங்களை வரைந்து போட்டியில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com