தாந்தோணிமலை பகுதிகளில் ஜன.19- இல் மின்தடை

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் ஜன.19 ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் ஜன.19 ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கரூர் கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை  வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மின்வாரியக் கோட்டத்துக்குள்பட்ட தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் ஜனவரி 19 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மற்றும் உயர் அழுத்த மின் கம்பித்தொடர் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும்பகுதிகளான தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com