சுடச்சுட

  


  தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் சார்பில் ஆலையைச் சுற்றியுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிகள் மற்றும் 5புன்னம், வேட்டமங்கலம், நஞ்சை புகழூர், திருக்காடுதுறை மற்றும் கோம்புபாளையம் ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் 
  பெண்கள் பங்கேற்கும் சமுதாய பொங்கல் விழா திங்கள்கிழமை (14-ம்தேதி) பு.புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. 
  விழாவில் கலந்து கொண்டு அனைவரும் பொங்கல் வைக்கத் தேவையான மண்பானை, சில்வர் வாளி, தட்டு, கரண்டி, அரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, மஞ்சள் கொத்து, எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், சூடம், பத்தி, சந்தனம், குங்குமம், திருநீறு, தீப்பெட்டி ஆகிய அனைத்துப் பொருட்களும் டி.என்.பி.எல். நிறுவனம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  மேலும் பாரம்பரியமிக்க கிராமியக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம், போன்ற கிராமப்புற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இத் தகவலை ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai