சுடச்சுட

  

  மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி மே இறுதிக்குள் முடியும்

  By DIN  |   Published on : 13th January 2019 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றார் பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் எஸ். மனோகர். 
  கரூர் காந்திகிராமத்தில் கட்டப்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப்பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் கூறியது:
  ரூ. 269.59 கோடியில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணி கடந்த 1.3.2018 அன்று தொடங்கி விரைவாக நடைபெறுகிறது. ரூ. 75.79 கோடியில் 3.20 லட்சம் சதுரடியில் வகுப்பறைக் கட்டடங்களும், ரூ. 122.79 கோடியில் 5.58 லட்சம் சதுரடியில் மருத்துவமனைக் கட்டடங்களும், ரூ. 71.01 கோடியில் 2.99 லட்சம் சதுரடியில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளும் என ரூ. 269.59 கோடியில் 11.78 லட்சம் சதுரடியில் பணிகள் நடைபெறுகின்றன. இந்த மருத்துவக் கல்லூரி பணி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கரில் நடைபெற்று வருகிறது.
  இந்த மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணி முடிவுற்றால் கரூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பெரிதும் பயன்படும். பணிகள் வரும் மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு 2019-20-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகள் நடைபெறும் என்றார் அவர். 
  ஆய்வின்போது பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் கே. பிரபாகரன், கண்காணிப்பு பொறியாளர் பி. மாதையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai