சுடச்சுட

  


  புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.
  கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் கார்வழியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மாசில்லா போகிப்பண்டிகை கொண்டாட தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
  நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  நிறைவில் ஆசிரியர் தங்கராஜ் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai