சுடச்சுட

  


  சஷ்டியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
  கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பாலமலை முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகத்தின்போது பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சனம், சந்தனம் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது. 
  இதில் சுற்று வட்டாரப்பகுதி பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
  இதேபோல வெண்ணைமலை முருகன் கோயில், புகழிமலை முருகன் கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai