சுடச்சுட

  


  வேலாயுதம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு சிக்கியது.
  கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பசுபதிநகரைச் சேர்ந்தவர் கண்ணகி (50). இவர் அதே பகுதியில் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு சனிக்கிழமை காலை புகுந்தது. 
  இதைக் கண்ட கண்ணகி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினருக்கு அளித்த தகவலின்பேரில் வந்த நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai