வெண்ணைமலை முருகன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் திருத்தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் திருத்தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
படைப்புத் தொழிலில் கர்வம் கொண்டு அத்தொழிலை சரிவர செய்யாத பிரம்மனுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் படைப்புத்தொழில் மேற்கொள்ள வஞ்சி மரங்கள் நிறைந்த கருவூருக்கு(கரூர்) தேவலோக பகவான் காமதேனுவை அனுப்பினார். அப்போது காமதேனுவால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் பசியின்றி வாழ வெண்ணையை உருவாக்கினார். பின்னர் அந்த வெண்ணையை மலையாக்கியதால் அது வெண்ணைமலை ஆயிற்று என்பது வரலாறு. 
இத்தகைய பெருமை கொண்ட மலையில் வீற்றிருக்கும் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதையடுத்து அதிகாலை கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் கோயிலில் கொடியேற்றினர். இதையடுத்து சுவாமி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுகளில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
தொடர்ந்து திங்கள்கிழமை சுவாமி பூத வாகனத்திலும், 15 ஆம் தேதி ஹம்ச வாகனத்திலும், 16 ஆம் தேதி மயில் வாகனத்திலும், 17 ஆம் தேதி ரிஷப வாகனம், 18 ஆம் தேதி யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 19 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவமும், 21 ஆம் தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 22 ஆம் தேதி தேனு தீர்த்தத்தில் தீர்த்தவாரியுடன் விழா முடிவடைகிறது. 
விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் சொக்கலிங்கம் செட்டியார், செயல் அலுவலர் வெ.ராசாராம் ஆகியோர் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com