கரூர் உழவர் சந்தையில் ரூ.9.22 லட்சத்துக்கு விற்பனையான காய்கறிகள்

பொங்கல் திருநாளையொட்டி கரூர் உழவர் சந்தையில் திங்கள்கிழமை மட்டும் 25 டன் காய்கறிகள் ரூ.9.22 லட்சத்துக்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி கரூர் உழவர் சந்தையில் திங்கள்கிழமை மட்டும் 25 டன் காய்கறிகள் ரூ.9.22 லட்சத்துக்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்படும் உழவர் சந்தைக்கு  வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, நெரூர், புகழூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் காய்கறிகள், பழங்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றன.
பொங்கல் திருநாளையொட்டி 173 விவசாயிகள் உழவர்சந்தைக்கு தங்கள் நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
உழவர்சந்தையில்  அதிகபட்சமாக முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.100-க்கு விற்பனையானது. கத்தரிக்காய் ரூ.22-க்கும், வெண்டைக்காய் ரூ.20, கோழி அவரை ரூ.60, பட்டை அவரை ரூ.50, தக்காளி ரூ.40, கத்தரிக்காய் ரூ.22, தேங்காய் ரூ.40, வாழைக்காய் ரூ.25, எலுமிச்சம்பழம் ரூ.60 என விற்கப்பட்டது.இதுகுறித்து, உழவர் சந்தை மேலாளர் கூறுகையில், மாவட்டத்தில் இருந்து 173 விவசாயிகள் இன்று 25 டன் எடைகொண்ட காய்கறிகளையும், 3,377  கிலோ எடை கனிகளும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றை 5700 பேர் ரூ.9.22லட்சத்துக்கு வாங்கிச் சென்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com