கரூரில் 5.6 டன் குட்கா பறிமுதல்: இருவர்  கைது

கரூரில் 3 குடோன்களில் தடை செய்யப்பட்ட ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள 5.6 டன் குட்கா பொருள்களைப் போலீஸார் பறிமுதல்

கரூரில் 3 குடோன்களில் தடை செய்யப்பட்ட ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள 5.6 டன் குட்கா பொருள்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.  
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சோதனைச்சாவடியில் கடந்த 14 ஆம் தேதி இரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த வேனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. 
விசாரணையில், வேன் ஓட்டுநர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம்(43), வேனில் இருந்த ராஜஸ்தான் மாநிலம்  ஜோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பாபுலால்(33) ஆகியோர் என்பதும், கரூர் ராயனூர் வெள்ளக்கவுண்டன் நகரைச் சேர்ந்த செல்வராஜ்(47) கிடங்கை, கரூர் சின்னாண்டாங்கோவில் ஏகேசி காலனியைச் சேர்ந்த தங்கராஜ்(51) வாடகைக்கு எடுத்து கரூர் ராயனூர் கேகே.நகரைச் சேர்ந்த செல்வராஜ்(47) என்பவருடன் சேர்ந்து பெங்களூரில் இருந்து குட்கா பொருள்களை கடத்தி வந்து கரூர் மாவட்டத்தில் விநியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது. 
தொடர்ந்து, ராயனூர் முத்துக்கவுண்டன் நகர், அண்ணாநகர் மற்றும் ஒத்தையூர் ஆகிய பகுதிகளில் உள்ள கிடங்குகளில் இருந்து 216 நைலான் மூட்டைகள், 202 அட்டை பெட்டிகளில் 5, 625 கிலோ எடை கொண்ட ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா, 
புகையிலை பொருள்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். 
இதையடுத்து தங்கராஜ், செல்வராஜ் ஆகிய இருவரையும் புதன்கிழமை அதிகாலை போலீஸார் கைது செய்தனர். தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com