"வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்குவதே நம் பணியாக இருக்க வேண்டும்'

வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்குவதே நம் பணியாக இருக்க வேண்டும் என்றார் கருவூர் திருக்குறள் பேரவையின் நிறுவனர் மேலை.பழநியப்பன்.

வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்குவதே நம் பணியாக இருக்க வேண்டும் என்றார் கருவூர் திருக்குறள் பேரவையின் நிறுவனர் மேலை.பழநியப்பன்.
திருவள்ளுவர் நாளை முன்னிட்டு கரூர் சீனிவாசபுரத்தில் உள்ள பேரவை அலுவலகம் முன் திருவள்ளுவர் படத்திற்கு புதன்கிழமை மாலை அணிவித்த அவர் மேலும் பேசியது: 
திருக்குறளை பொருள் உணர்ந்து படித்து வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மட்டுமே சிறப்பு உண்டாகும்.   திருமணம், மணி விழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா போன்றவற்றை குறள் வழிநடத்திட அனைவரும் முன்வரவேண்டும். முன்னோர்கள் கோலமிடுவதை ஒரு அறமாகத்தான் கடைப்பிடித்தார்கள்.  முன்னோர்கள் அரிசி மாவைத் தான் கோலமிட உபயோகப்படுத்தினர். 
அரிசி மாவில் கோலம் போடும்போது சிறு பிராணிகளான எறும்புகள், பூச்சிகள், பறவைகள் அவற்றை உண்டு கோலமிட்டவர்களை மனதார வாழ்த்தும். 
மொழி, பண்பாடு, கலாசாரம், குறள்வழி ஆகியவற்றையும் கடைப்பிடித்து, வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்குவதே நம் பணியாக இருக்கவேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில், தமிழறிஞர்கள் நன்செய்புகழூர் அழகரசன், நாகேந்திரகிருஷ்ணன், கிரி, க.ப.பாலசுப்ரமணியன், திருமூர்த்தி, சோமு, சதாசிவம், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com