கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 29th January 2019 04:38 AM | Last Updated : 29th January 2019 04:38 AM | அ+அ அ- |

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின சாதி மக்கள், பழங்குடியினத்தவர், பிற்படுத்தபட்டோருக்கும் தனியார் நிறுவனங்களிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமலாகும் வகையில் அவற்றை விரிவுப்படுத்த மக்களவையில் உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.இலக்குவன், கே.சக்திவேல், எம்.ஜோதிபாசு, ஜே.அன்னகாமாட்சி, பி.ராஜூ உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.