கரூர் மாவட்டத்தில்தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 2752 பேர்

கரூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு  ஆசிரியர் பயிற்சி முடித்த 2752 பேர் விண்ணப்பித்துள்ளனர். திங்கள்கிழமையும் அதிக எண்ணிக்கையில்


கரூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு  ஆசிரியர் பயிற்சி முடித்த 2752 பேர் விண்ணப்பித்துள்ளனர். திங்கள்கிழமையும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்ததாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திலும், 24 ஆம் தேதி முதல் மறியல் போராட்டத்திலும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கைது, பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்ட நிலையில், 25 ஆம் தேதிக்குள் பணியில் சேர நீதிமன்றமும் வேண்டுகோள் விடுத்தது.
ஆனாலும், ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டு வருவதால்,  மாணவர்களின் கல்வி நிலையைக் கருதி, வழங்கிய அவகாசத்தையும் ஆசிரியர்கள் ஏற்காததால், தற்காலிக ஆசிரியர்களை ரூ.10,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கும் முடிவை அரசு மேற்கொண்டது.
இதன்படி, கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள்பெறுதல் தொடங்கியது.
கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் ஆசிரியர் தகுதித்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் கூறியது: மாவட்டத்தில் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக 3,360  ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலும் 14 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக மாற்று ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பம் பெற்றுவருகிறோம்.  இருநாள்களில் 2752 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசின் உத்தரவுக்கிணங்க தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம். நாளை காலை பள்ளிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் புதிய ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com