தொடரும் போராட்டம்: கரூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் 1325 பேர் கைது

வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அரசு காலக்கெடு விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், அதை பொருள்ப


வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அரசு காலக்கெடு விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், அதை பொருள்படுத்தாது கரூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் 820 பெண்கள் உள்பட 1325 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம்பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த  22-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த 24-ம்தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   திங்கள்கிழமை காலை மறியல் போராட்டத்திற்கு தலைமை வகிக்க வந்த கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாவிஷ்ணனை நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் எம்.கும்மராஜா தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
 முன்னதாக கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு இருந்து ஊர்வலமாக வந்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்தோர், ஆசிரியர், அரசு ஊழியர்களை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு  கரூர்-திண்டுக்கல் சாலையில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 820 பெண்கள் உள்பட 1325 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com