புலியூர், சணப்பிரட்டி பகுதிகளில் இன்று மின்தடை
By DIN | Published On : 29th January 2019 04:37 AM | Last Updated : 29th January 2019 04:37 AM | அ+அ அ- |

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக புலியூர், சணப்பிரட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.29) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகத்தின் கரூர் செயற்பொறியாளர் எஸ். செந்தாமரை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மின் கோட்டத்திற்குள்பட்ட புலியூர் துணைமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிக்கட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.