கவிதை நூல் வெளியீடு
By DIN | Published On : 01st July 2019 08:31 AM | Last Updated : 01st July 2019 08:31 AM | அ+அ அ- |

கரூரில் புலவர் குறளகனின் "போட்டியில் பூத்த நறுமலர்கள் "மரபுக் கவிதை நூல் வெளியீடு விழா ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. திருக்குறள் பேரவைத் தலைவர் ப. தங்கராசு தலைமை வகித்தார். திருக்குறள் பேரவைச் செயலர் மேலை. பழநியப்பன் நூல் ஆசிரியரின் சிறப்புகளை விளக்கினார்.
திருக்குறள் அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் ப. ரமேஷ் நூலை வெளியிட, வள்ளுவர் குழுமத் தலைவர் க. செங்குட்டுவன் பெற்றுக் கொண்டார். பாவலர் ப. எழில்வாணன் நூல் திறனாய்வு உரையாற்றினார்.
முனைவர் கோவிந்தராசு, அன்னை கல்லூரி முதல்வர் சாருமதி ஆகியோர் வாழ்த்தினர். புலவர் குறளகன் ஏற்புரையாற்றினார். தமிழ் ராஜேந்திரன், தென்னிலை கோவிந்தன், கவிஞர் அழகரசன் , பொன்பாண்டு செரங்கர், பேங்க் சுப்ரமணியன், இன்ஜினியர் ராமசாமி, தமிழன் குமாரசாமிஏசுதர், திருச்சி கவிஞர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். நல வாழ்வு மைய அ.பொ. முத்துசாமி வரவேற்றார்.