சுடச்சுட

    

    ஆண்டாங்கோவில்புதூர்  தொடக்கப்பள்ளியில் வாசிப்பு இயக்கம்

    By DIN  |   Published on : 02nd July 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டாங்கோவில்புதூர்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாசிப்பு இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    ஆண்டாங்கோவில் கிழக்கு நூலகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாசிப்புத்திறனை வளர்க்கும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் ஆண்டாங்கோவில்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாசிப்பு இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
    வாசிப்பு இயக்கத்திற்கு பள்ளித்தலைமை ஆசிரியை கண்மணி தலைமை வகித்தார். 
    விழாவில், ஆண்டாங்கோவில் கிழக்கு நூலகத்தின் நூலகர் கோகிலா வரவேற்றார். 
    இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று நூல்களை வாசித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai