சுடச்சுட

  

  தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு இனி இணையதளத்தில் விண்ணப்பித்தே பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார் கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
  கரூர் மக்களின் வசதிக்காகவும், துரித சேவைக்காகவும் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் புதிய தொழிற்சாலை மின் இணைப்பு பெற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளமான w‌w‌w.‌t​a‌n‌g‌e‌d​c‌o.‌g‌o‌v.‌i‌n வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
  மேலும் ஆவணங்களும் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படவேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. எனவே திங்கள்கிழமை  முதல் தொழிற்சாலை மின் இணைப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai