கரூர் ஆதிமாரியம்மன் கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தினர் வழிபட அனுமதி

கரூர் ஆதிமாரியம்மன் கோயிலுக்குள் சென்று குறிப்பிட்ட சமுதாயத்தினர் வழிபட அனுமதி அளித்து

கரூர் ஆதிமாரியம்மன் கோயிலுக்குள் சென்று குறிப்பிட்ட சமுதாயத்தினர் வழிபட அனுமதி அளித்து கரூர் கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
கரூர் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஆதிமாரியம்மன் கோயிலில்  வழிபடுவதற்கு, வெங்கக்கல்பட்டியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை எனக் கூறப்படுகிறது. நிகழாண்டில் கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கிய கோயில் திருவிழா  புதன்கிழமையுடன் (ஜூலை 10) முடிவடைகிறது. இந்நிலையில், கரூர் கோட்டாட்சியரிடம் வெங்கக்கல்பட்டியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் கோயிலுக்குள் சென்றுவழிபட எங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோயிலில் வழிபடும் அனைத்து சமுதாயத்தினரையும் கரூர் கோட்டாட்சியர் சந்தியா செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
இதில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள்,  கோயிலில் வழிபடும் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்தக் கோயில்  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதால், கோயிலுக்குள் சென்று வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு. எனவே, வெங்கக்கல்பட்டியைச் சேர்ந்தவர்களும் கோயிலுக்கும் சென்று வழிபட அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் தங்களது வழிபாட்டை முடித்து விட்டு அங்கிருந்து வெளியேறிடவேண்டும். மேலும் வெங்கக்கல்பட்டி சமுதாயத்தினர் வழிபாடு நடத்தும்போது, காவல்துறையினர், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் எனக்கூறினார். இதையடுத்து அனைத்து சமுதாயத்தினரும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com