கரூர் கட்டளை மேட்டுவாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு

குடிமராமத்துத் திட்டத்தில் மாயனூர், மகாதானபுரம், மயிலாடி மற்றும் பொய்யாமணி ஆகிய பகுதிகளில்

குடிமராமத்துத் திட்டத்தில் மாயனூர், மகாதானபுரம், மயிலாடி மற்றும் பொய்யாமணி ஆகிய பகுதிகளில் கட்டளை மேட்டுவாய்க்கால் தூர்வாரும் பணிநடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்குள்பட்ட மாயனூர், மகாதானபுரம், மயிலாடி மற்றும் பொய்யாமணி ஆகிய பகுதிகளில் கட்டளை மேட்டு வாய்க்காலில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை புதன்கிழமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 
கரூர் மாவட்டத்தில் கட்டளை மேட்டுவாய்க்கால் மற்றும் அதன் கிளைவாய்க்கால்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பில் 5 பணிகளையும், புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலை தூர்வார ரூ.80 லட்சம் மதிப்பில் 3 பணிகளையும் குடிமராமத்து செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  கட்டளைமேட்டு வாய்க்காலில் 22.20 கிலோ மீட்டரும், புதுகட்டளை மேட்டு வாய்க்காலில் 24 கிலோ மீட்டரும், பள்ளவாய்க்கால், படுகைவாய்க்கால், சித்தலவாய் வாய்க்கால், மற்றும்  மகாதானபுரம் வாய்க்கால் முழுவதுமாக தூர்வாரப்படவுள்ளது. இந்த வாய்க்கால் தூர் வாரப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் நீர் வரும்போது, சுமார் 20,552 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும் என்றார். 
நிகழ்வின்போது, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் எம்.லியாகத், காவிரி வடிநிலக் கோட்ட பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர்கள் கார்த்தி, கொளஞ்சிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com