நொய்யல் அரசு மேல்நிலைப் பள்ளியில்  மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

நொய்யல் பெரியார் ஈ.வெ.ரா அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து

நொய்யல் பெரியார் ஈ.வெ.ரா அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் குழுவினர் புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கரூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும், மழைநீர் சேகரிக்கும் அமைப்பினை அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் இருப்பதை உறுதி செய்யவும், மத்திய அரசின் சார்பில் ஜல்சக்தி அபியான் என்ற  குழுவினர் வருகை தந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அனைத்துத் துறை அலுவலர்களுடனான குடிநீர் மேம்பாடு குறித்து ஆலோசனை செய்த இக்குழுவினர் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டவும், குடிநீர் மேம்பாட்டிற்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை நொய்யல் பெரியார் ஈ.வெ.ரா அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் ஐல் சக்தி அபியான் குழுவின் தலைவர் உஷா சுரேஷ் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா ஆகியோர் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது  மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் வருங்காலத்தின் குடிநீர் தேவையின் முக்கிய பங்காகும். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.  
ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் ஒரு மரமாவது நட்டு பராமரிக்க வேண்டும். நீர் மேலாண்மை குறித்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் பயன்படுத்த வேண்டும். 
குடிநீர் குழாய்களைத் திறந்துவிட்டபடி பயன்படுத்தமால் நீரை  பாத்திரங்களில் பிடித்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இதை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com