சுடச்சுட

  


  கர்நாடகாவில் காங்கிரஸ் அரசில் பாஜகவின் தலையீட்டைக் கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சின்னையன், நகரத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
  இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி, அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர் பேங்க் கே. சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை விலைபேசும் பாஜகவையும், ஆளுநரின் சட்ட விரோதப்போக்கைக் கண்டித்தும் குரல் எழுப்பினர். இதில் காங்கிரஸ் கட்சியின் மூக்கணாங்குறிச்சி சிவசாமி, ஆடிட்டர் ரவிச்சந்திரன், தாந்தோணிகுமார் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai