சுடச்சுட

  


  குதிரை துள்ளல் நிகழ்ச்சியுடன் சணபிரட்டி செல்லாண்டியம்மன் கோயில் தேர் திருவிழா தொடங்கியது .   
  கரூர் செல்லாண்டியம்மன் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் அம்மன், குதிரை மேல் புகுந்து சிலிர்த்தெழுந்து வந்து கோயிலில் குடிபுகுந்தால் தான் விழா நடத்தப்படும் என்பது ஐதீகம். 
  இதனால் விழா ஏற்பாட்டிற்காக வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் சணப்பிரட்டி, பசுபதிபாளையம், ராமகவுண்டனூர், வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், மூலகாட்டானூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்கள் கோயில் முன் திரண்டனர். 
  பின்னர் குதிரை துள்ளல் நிகழ்ச்சியை முன்னிட்டு கோயில் முன் பூஜை செய்து குதிரை ஒன்றை அழைத்துவந்து,  ஊரின் எல்லையிலுள்ள வில்வமரத்து அடியில் நிற்க வைத்தனர். 
  பின்னர் நள்ளிரவு 12.10 மணியளவில் கோயிலை குதிரை வந்தடைந்த போது, அம்மனே வந்து விழா நடத்த உத்தரவு கொடுத்து விட்டதாக பக்தர்கள் கருதி மகிழ்ச்சியடைந்தனர். 
  அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
  தொடர்ந்து காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. வரும் 16-ஆம்தேதி அம்மன் ரதம் ஏறும் நிகழ்ச்சியும், 17-ஆம் தேதி திருத்தேர் புறப்பாடும், 18-ஆம் தேதி மறுதேர் புறப்பாடும், பின்னர் கிடாவெட்டு, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 
  வரும் 19-ஆம் தேதி அம்மன் குடிபுகுதல், வாண வேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai