நெகிழி தீமை விழிப்புணர்வு போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

டிஎன்பிஎல் ஆலை சார்பில் நடைபெற்ற நெகிழி விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


டிஎன்பிஎல் ஆலை சார்பில் நடைபெற்ற நெகிழி விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூர் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ்,  ஆலையைச் சுற்றி அமைந்துள்ள 11 அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.  இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஆலையின் முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) பா.பட்டாபிராமன் தலைமை வகித்தார்.  
முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி) கு.தங்கராஜூ, உதவி பொது மேலாளர் (சுற்றுச்சூழல்)ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற 48 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.  விழாவில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com