மக்கள் நீதிமன்றம்: 310 வழக்குகளில் ரூ.30.29 கோடியில் தீர்வு

கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதலாத் எனும் மக்கள் நீதிமன்றத்தில்  310 வழக்குகளில் ரூ.30.29 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.


கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதலாத் எனும் மக்கள் நீதிமன்றத்தில்  310 வழக்குகளில் ரூ.30.29 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் கரூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றங்கள் சனிக்கிழமை நடைபெற்றது. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், சிவில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விபத்து இழப்பீடு வழக்குகள், வேலையாள் இழப்பீடு வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், கடனுறுதி சீட்டு (புரோ நோட்டு), பாகப்பிரிவினை வழக்குகள்,  உரிமையியல் வழக்குகள், திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் (விவாகரத்து தவிர), காசோலை மோசடி, குடும்ப வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் சமாதானம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள், வங்கிகள் தாக்கல் செய்துள்ள கல்வி கடன், விவசாய கடன் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டன. கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், கரூர் மாவட்ட நீதிபதியுமான எம்.கிறிஸ்டோபர் தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் என்.மோகன்ராம் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் மூன்று அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டதில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி டி.பாலகிருஷ்ணன், வழக்குரைஞர் கே.கணேசன், எஸ்.மணிகண்டசாமி, எஸ்.சிவக்குமார், சமூக ஆர்வலர் எம்.காமாட்சி, மருத்துவர் வி.ராமன் ஆகியோர் பங்கேற்றனர். குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற அமர்வுகளில் சார்பு நீதிபதி சி.ஸ்ரீதர், மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.ராஜேஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.பாக்கியராஜ், வழக்குரைஞர் ஆர்.நடராஜன், ஐ.முகமதுஜாபர், சமூக ஆர்வலர் எஸ்.நடராஜன், ஏ.மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
இருநீதிமன்றங்களிலும் நடைபெற்ற அமர்வுகளில் மொத்தம் 2,373 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 310 வழக்குகளில் ரூ.30,29,79,633 மதிப்பில் பயனாளிகளுக்கு தீர்வுகண்டு நிவாரணம் வழங்கப்பட்டது. 
மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கல்: கரூர் மாவட்டத்தில் வழக்குகளில் தீர்வுகண்ட பயனாளிகளுக்கு நிவராணச் சான்றிதழுடன் இளநீர் குடுவையில் மரக்கன்றுகள், குடும்ப வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளில் தீர்வு கண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com