காமராஜர் பிறந்த தின சைக்கிள் போட்டி

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்கிள்

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கரூர் மாவட்ட நாடார் இளைஞர் பேரவை மற்றும் நாடார் மகாஜன சங்கம், பனங்காட்டுமக்கள் கழகம் சார்பில் மாநில அளவில் சைக்கிள் போட்டி கரூரில் கரூர் பாலிடெக்னிக் அருகே நடைபெற்றது. போட்டியை நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.ஹரிநாடார் தொடக்கி வைத்தார்.  
போட்டியில் திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் பங்கேற்றனர். வீரர்களுக்கு கரூர் பாலிடெக்னிக் முதல் புன்னம்சத்திரம் வரை சுமார் 10 கி.மீ. தூரம் என தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வீரர்கள் விரைந்து சென்று மீண்டும் கரூர் பாலிடெக்னிக் நுழைவு வாயில் முன் வந்தடைந்தனர். போட்டியில் கரூரைச் சேர்ந்த கதிர்வேல் முதலிடத்தையும், திருச்சியைச் சேர்ந்த ஆனந்த் இரண்டாமிடத்தையும், கரூரைச் சேர்ந்த சிவா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.  
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.6,000, மூன்றாம் பரிசாக ரூ.4,000 வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை பனங்காட்டு மக்கள் கழகத்தின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் வைகைரவி, நாடார் மகாஜன சங்க மாவட்டச் செயலாளர் ராசிசதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com