இளம்பெண் மீது வெந்நீரை ஊற்றிய மூதாட்டி
By DIN | Published On : 19th July 2019 05:10 AM | Last Updated : 19th July 2019 05:10 AM | அ+அ அ- |

குளித்தலையை அடுத்த வெள்ளாளப்பட்டி காந்திநகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி வேம்பரசி(32). புதன்கிழமை இவர்களது குழந்தைகள் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயா(70) என்ற மூதாட்டி வீட்டின் அருகே விளையாடியுள்ளனர்.
இதற்கு மூதாட்டி விஜயா கண்டித்துள்ளார். இதனை வேம்பரசி தட்டிக்கேட்டபோது, வீட்டில் சமையல் செய்த பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீரை எடுத்து விஜயா வேம்பரசி மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த வேம்பரசி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின்பேரில் மூதாட்டி விஜயா மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.