Enable Javscript for better performance
அரசுப் பேருந்துகள் மோதல்: 15 பேர் காயம்; வடமாநில இளைஞர் கை துண்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்துகள் மோதல்: 15 பேர் காயம்; வடமாநில இளைஞர் கை துண்டிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    க. பரமத்தி அருகே அரசுப் பேருந்துகள் நேருக்குநேர் புதன்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்; வடமாநில இளைஞரின் கை துண்டானது.
    திருச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை சென்றுகொண்டிருந்தது.  கரூரை கடந்து கரூர்-கோவை சாலையில் க. பரமத்தி அருகே சென்றபோது, இந்தப் பேருந்தும் எதிரே கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்தும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் கோவை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணம் செய்த உத்தரபிரதேசத்தை மனோஜ் (30) என்ற இளைஞரின் கை துண்டானது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த க. பரமத்தி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மனோஜை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் காயமடைந்தவர்களுக்கு க. பரமத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai