Enable Javscript for better performance
கரூர் அருகே மாணவி கர்ப்பம்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கரூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த கீழத்தலையூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயா (45). இவர்களுக்கு 3 மகள்கள்.  இவர்களில் 15 வயது நிரம்பிய மூன்றாவது மகள் எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  9-ம் வகுப்பு பயின்று வருகிறார். 
    இவரது வீட்டின் அருகில் இவரது உறவினர் சங்கர் மகன் லோகநாதன்(25) என்பவர் மாணவியிடம்  திருமண ஆசை காட்டி தகாத முறையில் நடந்துகொண்டதால் தற்போது மாணவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். லோகநாதன் திருமணத்துக்கு மறுத்ததால் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவரை புதன்கிழமை காலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai