Enable Javscript for better performance
விஏஓக்கள் மீது புகார் மனுக்கள் அளிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    விஏஓக்கள் மீது புகார் மனுக்களை பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகக் குழுவிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
     சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரப்பெறும் புகார்களை விசாரணை செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
    இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் கரூர் வட்டாட்சிய ர் அல்லது அலுவலக மேலாளர் (பொது), தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோர் உள்ளனர். இவர்களிடம் விஏஓக்கள் மீதான புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai