Enable Javscript for better performance
"வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம்'- Dinamani

சுடச்சுட

    

    வருங்காலச் சந்ததியினரைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரின் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைப்பது கட்டாயம் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ்.
    கரூர் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட ஆத்தூர் பெரியவடுகப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவுநாள் முகாமில் 90 பயனாளிகளுக்கு ரூ. 30.31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் மேலும் பேசியது:
    ஒட்டுமொத்த துறைகளை இங்கே அழைத்து வந்து முகாம் நடத்துவதால், ஒவ்வொரு துறை சார்பில் என்னென்ன அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக மக்களிடம் விளக்க முடியும். 
    முன்பெல்லாம் குடிநீர் சுமார் 10 அடி ஆழத்திற்குள் கிடைத்தது. ஆனால் இன்று ஆயிரம் அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் அமைத்தாலும் கிடைப்பதில்லை. அரசிடம் தண்ணீர் இல்லையே, தண்ணீர் இல்லையே எனப் புகார் கூறுகிறோம். ஆனால் என்றைக்காவது நாம் மழை நீரைச் சேமிக்க வழிவகை செய்திருக்கிறோமா?. 
    ஒவ்வொருவரின் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர்மட்ட அளவை உயர்த்த முடியும்  என்றார். தொடர்ந்து 15 பேருக்கு ரூ.18 லட்சத்தில் முதியோர் உதவித்தொகை, 6 பேருக்கு விதவை உதவித்தொகை, 37 பேருக்கு பட்டாமாற்றம்,  2 பேருக்கு சொட்டுநீர் பாசனம் கருவி உள்பட மொத்தம் 90 பேருக்கு ரூ. 30.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
     கரூர் கோட்டாட்சியர் சந்தியா, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார், கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.திருவிகா, வேளாண் உதவி இயக்குநர் சிவானந்தம், மண்டல துணை வட்டாட்சியர் குமரவேல், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு), வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார், நூலகர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    முன்னதாக துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை  பார்வையிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai