முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
இளைஞர் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக சேர ஆக.15-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 30th July 2019 09:39 AM | Last Updated : 30th July 2019 09:39 AM | அ+அ அ- |

இளைஞர் நீதிக் குழுமத்தில் உறுப்பினராகச் சேர ஆக.15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இளைஞர் நீதிக் குழுமத்திற்கு ஒரு பெண் உள்பட 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இக்குழுவில் உறுப்பினராக விரும்பும் நபர்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் ஏழு ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அனுபவச் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம் சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், 65 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இரு முறை பதவி வகிக்க இயலாது. மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இதற்கான விண்ணப்ப
படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.13 சாமி வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் எதிரில் மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்), கரூர் மாவட்டம் 639 007 என்ற முகவரியில் உள்ள அலுவலத்தில் பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து மேற்சொன்ன முகவரிக்கு ஆ.15-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.