பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் நிரப்ப வலியுறுத்தல்

வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றின் மூலம் நீர் நிரப்ப வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றின் மூலம் நீர் நிரப்ப வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூரில் ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் சங்க பொறுப்பாளர் கண்ணமுத்தாம்பட்டி ஆறுமுகம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சங்க மாவட்டச் செயலாளர் ஜிபிஎஸ். வடிவேலன் பங்கேற்று, சங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேவசிங்கம்பட்டி கிளை நிர்வாகிகளில் தலைவராக சுப்ரமணி, துணைத் தலைவராக சண்முகவேல், செயலாளராக வடிவேல், துணைச் செயலாளராக திருப்பதி, பொருளாளராக சிவசக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து கூட்டத்தில் தற்போது கட்டுமானத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றுமூலம் நீர் கொண்டு நிரப்பிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரியை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். வேலையில்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கிட தமிழக அரசு முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com