சுடச்சுட

    

    திமுக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    By DIN  |   Published on : 14th June 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திமுக ஒன்றியச் செயலாளர் கே.கருணாநிதியின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை நேரில் வாழ்த்து கூறினார்.
        கரூர் மாவட்டம் க.பரமத்தி திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் கே.கருணாநிதி. இவரது மகள் கே.சாகித்யா, மணமகன் கேஎன்.ரஞ்சித் செல்லப்பா ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை  திருமணம் நடைபெறுகிறது. 
    இதனை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கரூர் அட்லஸ் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை நேரில் வாழ்த்தினார். 
    விழாவில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ம. சின்னசாமி, முன்னாள் எம்பி. கேசி.பழனிசாமி, திமுக நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கட்சியினர், இருவீட்டாரின் உறவினர்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai