சுடச்சுட

  

  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வள்ளுவர் கல்லூரி மாணவர்களுக்கு வங்கி செயல்பாடு குறித்து வியாழக்கிழமை சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.
   கரூர் மாவட்டத்தில் முன்னோடி வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கரூர் வள்ளுவர் கல்லூரியில் பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு வங்கி செயல்பாடு மற்றும் சேவை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் கடந்த மாதம் தொடங்கியது. வியாழக்கிழமையுடன் பயிற்சி முகாம் நிறைவடைந்தது. கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நடைபெற்ற பயிற்சி நிறைவு முகாமிற்கு கல்லூரியின் தாளாளர் க.செங்குட்டுவன் தலைமை வகித்தார். 
  முகாமில், மாணவர்களுக்கு வங்கியின் பண பரிவர்த்தனை, சேமிப்பு கணக்குகள், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
  வங்கிகளில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி முகாம் மிகுந்த உதவியாக இருக்கும் என கல்லூரியின் தாளாளர் க.செங்குட்டுவன் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai