ரூ. 80 லட்சத்தில் கரூர் நகர கூட்டுறவு வங்கி  தலைமையகத்தை புதுப்பிக்க முடிவு

கரூர் நகர கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தை ரூ.80 லட்சம் மதிப்பில் புதுப்பிக்க நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.

கரூர் நகர கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தை ரூ.80 லட்சம் மதிப்பில் புதுப்பிக்க நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.
கரூர் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு கூட்டம்  வெங்கமேடு கிளை அலுவலகத்தில் வியாழக்கிழமை  நடந்தது. இதில் கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். திருவிகா தலைமை வகித்தார். கூட்டத்திற்கு மேலாண்மை அலுவலர் ரமேஷ், பொது மேலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், பணிபுரிவோருக்கு ரூ.3 லட்சம் வரை  கடன் வழங்க முன்னுரிமை வழங்குவது, வங்கியின் தலைமையகத்தை ரூ.80 லட்சம் 
செலவில் புதுப்பிப்பது, வராக்கடனை விரைந்து வசூல் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  செங்குந்தபுரம் கிளை மேலாளர் செந்தில் நன்றி கூறினார்.  இதில்  இயக்குநர்கள் உடையவர் மோகன், ராமமூர்த்தி, சுப்ரமணி, சாமிநாதன்,  பாலசுப்ரமணியம்,  குருசாமி,  மல்லிகா, கனகாம்பாள், செயல் இயக்குனர்கள் ஆடிட்டர் பரமசிவம், நவநீதன் உட்பட வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  வெங்கமேடு கிளை மேலாளர் குகநாதன் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com