157 ஊராட்சிகளிலும் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்
By DIN | Published On : 22nd June 2019 09:11 AM | Last Updated : 22nd June 2019 09:11 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (22-ஆம் தேதி) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் மழை நீர் பாதுகாப்பு,
நீரின் முக்கியத்துவம் மற்றும் பருவகால நிலை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.