பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற முதியவர் மீது வழக்கு
By DIN | Published On : 25th June 2019 08:50 AM | Last Updated : 25th June 2019 08:50 AM | அ+அ அ- |

மேட்டுமகாதானபுரத்தில் விதவையிடம் தகாத முறையில் நடக்க முயன்ற முதியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
ரூர் மாவட்டம், மேட்டுமகாதானபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி அமுதவல்லி(48). கணவர் இறந்துவிட்ட நிலையில் அமுதவல்லி அதே பகுதியில் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த நீதிராஜன்(58) என்பவர் அமுதவல்லியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றாராம். இதுகுறித்து அமுதவல்லி அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து நீதிராஜனைத் தேடி வருகின்றனர்.