சுடச்சுட

    

    கரூரை அடுத்த வெள்ளியணை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை மற்றும் வைர நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
    வெள்ளியணை அருகே உள்ள ஏமூர் அங்காளம்மன் நகரைச் சேர்ந்தவர் குமார்(61). இவர், தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை காலை கரூர் பஜாருக்கு வந்துள்ளனர். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 8 சவரன் நகை மற்றும் ஒரு வைரத்தினால் ஆன ஆரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai