தீ விபத்து: வைக்கோல் ஏற்றிய வேன் எரிந்து நாசம்
By DIN | Published On : 28th June 2019 08:50 AM | Last Updated : 28th June 2019 08:50 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வியாழக்கிழமை வைக்கோல் ஏற்றிய வேனில் ஏற்பட்ட தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. குளித்தலை அருகே வீரராக்கியம் அடுத்த வெள்ளையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் இளவரசன் (42). இவர், தனது வேனில் குளித்தலை பகுதியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு குழுமணி - நங்கவரம் சாலையில் வந்துகொண்டிருந்தார். பாறைப்பட்டி என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தபோது, திடீரென வேனில் தீப்பற்றியது. இதனைக்கண்ட இளவரசன் வேனிலிருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். மளமளவென வைக்கோல் மீது தீப்பற்றியதால் வைக்கோல், வேன் ஆகியவை முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.